வால்பாறை: தேர்தல் பறக்கும்படையினர் சோதனையில் காரில் ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.55 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பறக்கும் படை அதிகாரி கிருஷ்ணன், தலைமை காவலர் நவநீதகிருஷ்ணன், காவலர் வீரகுமார் ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்காளர்களுக்கு பணம் அல்லது பரிசுப்பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா என வாகனங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வேட்டைக்காரன் புதூரில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ஆவணம் இல்லாமல் காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.55 ஆயிரம் ரொக்கப்பணம் ராகவன்(45) என்பவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் வால்பாறை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.