கோவை: ஆ.ராசாவைக் கண்டித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மகன் விகாஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் குறித்து அவதூறாக பேசிய ஆ.ராசாவைக் கண்டித்து கோவை சுகுணாபுரம் பகுதியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணியின் மகன் விகாஷ் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆ ராசாவின் உருவ படத்தை அதிமுகவினர் தீ வைத்து எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் உரையாறிய விகாஷ் கூறியதாவது;

"திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆ. ராசா தமிழக முதல்வரின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் வாயில் சொல்ல இயலாத வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசியுள்ளார். இது தமிழக மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆயிரம் கருணாநிதிகள் வந்தால் கூட தமிழக முதல்வரின் தாய் தவுசியம்மாளுக்கு ஈடாக முடியாது. தன் மகனை தன்மானம் மிக்கவராக, நல்லவராக, மக்களுக்கு உதவும் குணம் உள்ளவராக, பாடுபட்டு உழைக்கும் விவசாயியாக அந்த தாய் மாற்றியிருக்கிறார்.
அப்படிப்பட்ட பெருமை மிக்க தாயாரை ஆ.ராசா இழிவுபடுத்தி பேசியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒரு மகனை ரவுடியாகவும் மற்றொரு மகனை தத்தியாகவும் வளர்த்துள்ளார்.
பெற்ற மகனை யார் என சொல்லாமல் மறைத்து காட்டியிருக்கிறார். தாய்மார்களை இழிவு படுத்தும் ஆ. ராசாவின் செயலை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்." இவ்வாறு விகாஷ் பேசினார்.