தொண்டாமுத்தூர் தொகுதி: கலைஞரின் நெருங்கிய நண்பர் குடும்பத்தாரை சந்தித்து வாழ்த்து பெற்றார், கார்த்திகேய சிவசேனாபதி..!

கோவை: கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குனியமுத்தூர் பகுதி கழகத்தில் 87வது வார்டில் உள்ள வெற்றிலைக்கார வீதியில் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



கோவை: கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குனியமுத்தூர் பகுதி கழகத்தில் 87வது வார்டில் உள்ள வெற்றிலைக்கார வீதியில் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 



அதன் ஒரு பகுதியாக, இன்று கலைஞரின் நெருங்கிய நண்பர், ராமு என்பவரது குடும்பத்தாரை சந்தித்து வாழ்த்து பெற்றார். கலைஞர் அவர்கள் திரைப்பட பாடல்கள் கதை, வசனம் எழுதி வந்த நாட்களில், ராமுவுடன் குனியமுத்தூரில் உள்ள அவரது இல்லத்தில், கலைஞர் தங்கியுள்ளார். 



தொண்டாமுத்தூர் தொகுதியில் குனியமுத்தூர் ராமு என்று பலராலும் அறியப்படுபவர், 1950-களில் கலைஞரின் மந்திரகுமாரி போன்ற படங்களுக்கு கதை, வசனம் எழுதிய போது ராமு அவர்களின் இல்லத்தில் ஒன்றாக தங்கியிருந்து கட்சி பணிகளையும் கவனித்து வந்துள்ளார். கலைஞர் எப்போது கோவை வந்தாலும், அவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ராமூவை பார்த்துவிட்டு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார், என்பது கூடுதல் தகவல். 

மொழிப்போர் தியாகியான இவர் இறந்த பின்பு, அவரது மனைவி ராஜம்மாள், மகள் வசந்தா மற்றும் குடும்பத்தார் கோவையிலேயே வசித்து வந்தனர். இன்று அவர்களை மரியாதை நிமித்தமாக, தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும், கார்த்திகேய சிவசேனாபதி நேரில் சென்று ஆதரவு தரும்படி கோரினார். 

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...