கோவை: கோவை தெற்கு தொகுதி முழுவதும் இலவச வை்ஃபை வசதி அளிக்கப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்களைக்கொண்ட பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கோவை ராம்நகர் தனியார் விடுதியில் கோவை தெற்கு தொகுதிக்கான பா.ஜ.க தேர்தல் அறிக்கையை, அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சி.டி.ரவி வெளியிட்டார்.

கோவை தெற்கு பகுதியை சேர்ந்த சுய தொழில் மேற்கொள்ளும் பெண்கள் தேர்தல் அறிக்கை வெளியீட்டில் கலந்துகொண்டு வானதி சீனிவாசனிடமிருந்து அறிக்கையை பெற்றுக் கொண்டனர்
கோவை தெற்குதொகுதி தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் வருமாறு;
“கோவை தெற்கு தொகுதி முழுவதும் இலவச வைஃபை வசதி கொடுக்கப்படும். திருவள்ளுவர் பெயரில் நூலகம் அமைக்கப்படும். மத்திய சிறைச் சாலை இடமாற்றம் செய்யப்பட்டு, உயிரியல் பூங்கா அமைக்கப்படும். ஜுவல்லரி பார்க் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்களுடன் நேரடியாக கலந்துரையாட ‘உங்களுடன் வானதி’ என்ற இணைய நிரல் உருவாக்கப்படும். ரேஷன் கடைகளில் இருந்து பொருட்களை வீடு வீடாக விநியோகம் செய்ய மகளிர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். கோவையில் ஐ.ஐ.எம் அமைக்கப்படும். இவ்வாறு கோவை தெற்கு தொகுதி தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சிடி ரவி கூறியதாவது;

“கோவை தெற்கு தொகுதியில் மக்கள் ஹீரோவுக்கும், சினிமா ஹீரோவுக்கும் நடக்கும் போட்டியில் மக்கள் ஹீரோவான மண்ணின் மகள் வானதி சீனிவாசனுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.
தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்காக தினந்தோறும் பொய்களைச் சொல்லி வருகிறார். ஸ்டாலின் ஆத்திகரா? நாத்திகரா? என்பதை முதலில் அவர் தெளிவு படுத்த வேண்டும். இந்து கடவுள்களை மட்டுமே ஸ்டாலின் இழிவுபடுத்துவது ஏன்?
எல்லா விவகாரங்களிலும் திமுக தலைவர் ஸ்டாலின் இரட்டை நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறார். பா.ஜ.க வேல் யாத்திரை சென்ற பின்னர்தான் இந்து மக்களின் ஆதரவை இழந்து விடுவோமோ என்ற பயத்தில் அவரும் வேலை கையில் எடுத்தார்.
நீட் தேர்வு, ஜல்லிக்கட்டு போட்டிக்குத் தடை என்று திமுக இன்றைக்கு எதிர்க்கும் அனைத்து விஷயங்களும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டவை தான். அப்போது ஆதரித்த திமுகஇப்போது எதிர்ப்பது போல் காட்டிக் கொள்வது ஏன்?
தமிழ்நாடு முன்னேற வேண்டும் என்றால் மோடி, எடப்பாடி பழனிச்சாமி என்ற இரட்டை என்ஜின் தேவை. கட்ட பஞ்சாயத்து, மின்வெட்டு வேண்டுமென்றால் திமுகவுக்கு வாக்களியுங்கள்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் குறித்து ஆ.ராசா எம்.பி இழிவாக பேசியது கண்டிக்கத்தக்கது. பெண்களை இழிவாக பேசுவது திமுகவினரின் மரபணுவிலேயே உள்ளது. இது அவர்களின் முதிர்ச்சியற்ற தன்மையைக் காட்டுகிறது.
டெல்லியில் இருந்து தமிழ்நாட்டை ஆளக்கூடாது என்ற ராகுல்காந்தியின் கருத்து தவறானது, ஜனநாயக ரீதியான நடவடிக்கைகளை புரிந்து கொள்ளாமல் ராகுல் பேசுகிறார்.
நிலம் கையகப்படுத்துதல் பணிகள் முடிவடைந்த பின்னர் மதுரை எஸ்ம்ஸ் மருத்துவமனைகான பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு சிடி ரவி பேட்டியளித்தார்.