கோவை: பொள்ளாச்சி அருகே ஒக்கிலிபாளையம் கிராமத்தில் பிரச்சாரத்தின் போது அதிமுக, திமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் அதிமுக கிளைச் செயலாளர் கிரி உள்ளிட்ட மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஒக்கிலிபாளையம் கிராமத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து பெண் விடுதலைக் கட்சியைச் சேர்ந்த சபரிமாலா பிரச்சாரம் செய்து செய்து கொண்டு இருந்தார்.
அப்போது, அதிமுக வேட்பாளர் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்போது இரு தரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.
இதில் திமுகவினர் தாக்கியதில் அதிமுகவைச் சேர்ந்த ஊராட்சி செயலாளர் கிரி மற்றும் உதயகுமார் ஜெகதீஷ் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். பின்னர் அங்கிருந்த போலீசார் கூட்டத்தை கலைத்தனர். காயமடைந்த மூன்று பேரும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இதையடுத்து, அதிமுகவினர் வடக்கிபாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளததைடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அதிமுகவினர் மீது திமுகவினரும் புகார் அளித்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுகவினரை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், திமுகவினர் வேண்டுமென்றே அதிமுகவினரை தாக்கியுள்ளனர். அதிமுக வெற்றியை தடுப்பதற்கு திமுகவினர் வன்முறையை தூண்டி விடுகின்றனர். இதுவன்மையாக கண்டிக்கத்தக்கது. முதல்வரைப் பற்றி தாறுமாறாகப் பேசுவது, மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் முறையை திமுகவினர் கைவிட வேண்டும் என்று குற்றம்சாட்டினார்.