அதிமுக சார்பில் பொள்ளாச்சி தொகுதிக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியீடு!

கோவை: அதிமுக சார்பில் பொள்ளாச்சி தொகுதிக்கு என தனித் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் வெளியிட்டார்.


கோவை: அதிமுக சார்பில் பொள்ளாச்சி தொகுதிக்கு என தனித் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் வெளியிட்டார்.

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பொது மக்களிடம் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்நிலையில் பொள்ளாச்சி அதிமுக தலைமை தேர்தல் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில், அமைதி,வளம்,வளர்ச்சி என்ற 30 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கை 2021 புத்தகத்தை முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் பொள்ளாச்சி ஜெயராமன் வெளியிட்டார்.

அந்த தேர்தல் அறிக்கையில், “பொள்ளாச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும், புதிய அரசு மருத்துவக் கல்லூரி உருவாக்கப்படும், அரசு பாலிடெக்னிக் கல்லூரி கொண்டுவரப்படும்,

பரம்பிக்குளம்-ஆழியாறு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும், ஆனைமலையாறு, நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும், பொள்ளாச்சியின் பண்பாட்டை பறைசாற்றும் வகையில் கொங்கு பண்பாட்டு மையம் மூலம் நூலகம் துவங்கப்படும்” என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...