கோவை: “இனி கோவைதான் என் வீடு. கோவைதான் எனது விலாசம்” என கோவை தெற்கு தொகுதியில் பரப்புரையின் போது கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் டாடாபாத் பகுதியில் வாக்கு சேகரிப்பின் போது பேசியதாவது;
“கோவை தெற்கு தொகுதியின் முகம் என்றால் இந்திய அளவில் எனது முகம்தான் நினைவுக்கு வரவேண்டும். இனி கோவைதான் என் வீடு அதுதான் எனது விலாசமும் கூட.
கோவை தெற்கு தொகுதி மட்டுமின்றி தமிழகம் முழுவதுமே போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. தமிழகம் முழுவதும் இந்த நிலையை மாற்ற வேண்டும். அதற்கான வாய்ப்பை எனக்கு அளியுங்கள்.
குடிநீரில் சாக்கடை நீரும் கலக்கும் அவலம் மிகச் சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது. இது மாதிரியான நிலைமைகளை விரைவில் மாற்ற என்னை வெற்றி பெறச் செய்யுங்கள். 100 நாட்களில் மாற்றங்களை நீங்கள் காண்பீர்கள்.”இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
மக்கள் நீதி மய்ய தலைவர்வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது கோவை காந்திபுரத்தை அடுத்த 100 அடி சாலையில் பாஜகஅலுவலகத்திற்கு முன்பு மநீம தொண்டர்கள், “உங்கள் ஓட்டு டார்ச் லைட்க்கு” என்று கோஷமிட்டபடி சென்றனர்.