கோவையை இந்தியாவின் மாபெரும் நகரமாக மாற்ற ஒரு எம்.எல்.ஏ போதும், பிரதமர் தேவையில்லை - கமல்ஹாசன் தீவிர பிரச்சாரம்..!

கோவையை இந்தியாவின் மாபெரும் நகரமாக மாற்ற ஒரு எம்.எல்.ஏ போதும், பிரதமர் தேவையில்லை - கமல்ஹாசன் தீவிர பிரச்சாரம்.


கோவை தெற்கு தொகுதி வாக்கு சேகரிப்பின் போது, சிவானந்தா காலனி பகுதியில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனின் பிரச்சாரத்தை கேட்க அதிகளவில் மக்கள் திரண்டனர்.

"இனி, கோவை தெற்கு தொகுதியின் முகமாக நான் இருப்பேன், கட்சி தொடங்கிய புதிதில் வீதிக்கு ஒரு நபர் எனது கட்சியிலிருந்து இருக்க வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் இப்போது வீட்டிற்கு ஒரு நபர் இருக்கிறார்கள்.ஒவ்வொரு வார்டிலும் எம்எல்ஏவின் அலுவலகம் அமைக்கப்படும் போது, மக்களின் குறைகளை அறிந்து கொள்ள முடியும்", என்று கமல்ஹாசன் பேசினார்.



நான் சினிமா நட்சத்திரமாக இருப்பது பெரிய விஷயம் அல்ல. உங்கள் வீட்டில் சிறு விளக்காக இருக்க விரும்புகிறேன் அதற்கான வாய்ப்பளியுங்கள்,

என்று நெகிழ்ச்சியாக பேசினார்.



பிரச்சாரத்தின் போது, அங்கிருந்த

கழிவுநீர் கால்வாயை சுட்டிக்காட்டி, சாக்கடைகளை சுத்தம் செய்ய கூட இப்போது ஆட்சியில் இருப்பவர்களால் இயலவில்லை. இந்நிலை மாற வேண்டும், என்றார் கமல்.

100 நாட்களில் முடியும் என்று மற்ற கட்சிகள் கூறி 10 வருடகாலமாக செய்யாமல் இருப்பதை நான் வெற்றி பெற்றால் 100 நாட்கள் செய்து காட்டுகிறேன். கோவையை இந்தியாவின் மாபெரும் நகரமாக மாற்ற ஒரு எம்.எல்.ஏ போதும் பிரதமர் தேவையில்லை, என்றார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...