கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பற்றிய தீயை அணைக்கப் போராடும் தீயணைப்பு வீரர்கள்!

கோவை: கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.



கோவை: கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் நாள் ஒன்றுக்கு டன் கணக்கில் வெள்ளலூர் கிடங்கில் கொட்டப்பட்டு, தரம் பிரிக்கப்படுகின்றன.

இந்த குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால், அங்கு தீயணைப்பு வீரர்களுடன் நிரந்தரமாக தீயணைப்பு வண்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிடங்கின் ஒரு பகுதியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த தீயணைப்பு வாகனம் மூலம் தீ அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.



ஆனால் தீ கட்டுக்கடங்காமல் மளமளவென பரவியதால் தெற்கு தீயணைப்பு நிலையத்தில் இருந்து கூடுதலாக தீயணைப்பு வாகனத்துடன் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.



மேலும் 4 தண்ணீர் லாரிகளும் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

கடந்த 4 ஆம் தேதி மற்றும் 15 ஆம் தேதி இதே குப்பைக் கிடங்கில் தீ விபத்துகள் ஏற்பட்ட நிலையில் ஒரே மாதத்தில் இன்று மூன்றாவது முறையாக குப்பைக் கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...