கோவை; கோவையில் இதுவரை 5000 டன் கட்டடக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு கல்லுக்குழிகளில் கொட்டப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை; கோவையில் இதுவரை 5000 டன் கட்டடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு கல்லுக்குழிகளில் கொட்டப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் சுமார் 5 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. நகரின் பல பகுதிகளில் பழையக் கட்டடங்களை சீரமைப்பது, புதிய கட்டடங்கள் கட்டுவது என கட்டடப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இதன்காரணமாக தினமும் 2 டன் வரை கட்டடக் கழிவுகள் சேகரமாகின்றன. மாநகராட்சி சார்பாக கட்டடக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கட்டடக் கழிவுகளை கொட்ட மாவட்டத்தில் உபயோகம் இல்லாத கல்லுக்குழிகள் கண்டறியப்பட்டுள்ளன. மதுக்கரை, சூலூர் பகுதியில் உபயோகமில்லாத கல்குவாரிகளில் உள்ள 2 கல்லுக்குழிகளில் மாநகரில் சேகரிக்கப்படும் கட்டடக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த கல்லுக்குழிகளில் கட்டடக் கழிவுகள் மட்டும் தான் கொட்டப்படுகின்றன.இதுவரை சுமார் 5 ஆயிரம் டன் வரை கல்லுக்குழிகளில் கட்டட கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன’’ என்றனர்.