கோவை: வால்பாறை சட்டமன்ற தொகுதி தேர்தல் நிலையான கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலக பணி நியமன அலுவலர் உள்ளிட்ட இருவர் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், தேர்தல் ஆணையம் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை நியமித்துள்ளது. இந்த பறக்கும் படையில், வருவாய்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
இந்நிலையில் வால்பாறை சட்டமன்ற தொகுதியில், தேர்தல் நிலையான கண்காணிப்புக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ள பொள்ளாச்சி வடக்கு வட்டார வளர்ச்சி அலுவலக பணி நியமன அலுவலர் வெள்ளியங்கிரி தலைமையிலான குழு செயல்பட்டு வருகிறது. தேர்தல் செலவின பார்வையாளரான ராம் கிருஷ்ணகெடியா தாம் சமர்ப்பித்த அறிக்கையை இரண்டு மணி நேரத்திற்குள் ஆய்வுக்கு உட்படுத்தி, தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு வெள்ளிங்கிரி குழுவிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில், நீண்ட நேரம் ஆகியும் பார்வையாளருக்கு பறக்கும் படை அதிகாரிகள் அறிக்கையை சமர்ப்பிக்காததால், வட்டார வளர்ச்சி பணி நியமன அலுவலர் வெள்ளியங்கிரி, வால்பாறை சரகத்தில் உள்ள நிலையான கண்காணிப்பு குழுவில் இருந்த காவலர்கள் பிரசாத் மற்றும் குமரவேல் ஆகிய மூன்று பேர் மீதும் தேர்தல் செலவின பார்வையாளர் ராம்கிருஷ்ணகெடியா மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை ஏற்ற மாவட்ட ஆட்சியர் நாகராஜன், விசாரணை நடத்தி அவர்கள் மூன்று பேரையும் பணியிட நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.