திருப்பூரில் அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் 2 நாள் உற்பத்தி நிறுத்தப் போராட்டம்!

திருப்பூர்: திருப்பூரில் அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் இன்றும், நாளையும் என 2 நாள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூரில் அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் இன்றும், நாளையும் என 2 நாள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூரில் ஏராளமான பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகளை அட்டைப் பெட்டியில் வைத்து ஏற்றுமதி செய்வது வழக்கம். தற்போது அட்டைப்பெட்டி செய்வதற்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்ந்து வருவதால் அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.



கடந்த செப்டம்பர் மாதம் முதல் காகிதத்தின் விலை 85 சதவீதம் வரை உயர்ந்து வருவதால் தங்கள் வாழ்வாதாரமான அட்டைப்பெட்டி உற்பத்தி தொழிலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனை கருத்தில்கொண்டு மத்திய அரசு காகிதத்தை ஏற்றுமதி செய்வதைக் கட்டுப்படுத்தி உள்நாட்டு உற்பத்திக்கு அதிக அளவு பயன்படுத்த வேண்டும், காகிதம் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லும் வகையில் இன்றும், நாளையும் இரண்டு நாள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...