தொழிலாளர்களுக்கு துரோகம் செய்த அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியை தோற்கடிப்போம்: திருப்பூர் தொழிற்சங்கங்கள் தீர்மானம்!

திருப்பூர்: தொழிலாளர்களுக்கு துரோகம் செய்த அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியை சட்டமன்றத் தேர்தலில் தோற்கடிக்க வலியுறுத்தி பிரச்சாரம் செய்வதென திருப்பூர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.


திருப்பூர்: தொழிலாளர்களுக்கு துரோகம் செய்த அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியை சட்டமன்றத் தேர்தலில் தோற்கடிக்க வலியுறுத்தி பிரச்சாரம் செய்வதென திருப்பூர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

திருப்பூர் சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் அனைத்துத் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தி.மு.க., ஏ.ஐ.டி.யு.சி. மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டன. சி.ஐ.டி.யு. பனியன் தொழிலாளர் சங்கத் தலைவர் சி.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் குறிப்பாக மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு தொழிலாளர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் விதத்தில் 44 தொழிலாளர் சட்டங்களை திருத்தி நான்கு சட்டத் தொகுப்புகளாக மாற்றியுள்ளது.

அதில் தொழிலாளர்களின் சங்கம் வைக்கும் உரிமை, கூட்டு பேர உரிமை வெட்டி சுருக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்த உரிமையும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களை கொத்தடிமைகள் போல கார்ப்பரேட் பெரு முதலாளிகள் வேலை வாங்குவதற்கு வசதி செய்து தருவதாக இந்த தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் உள்ளன. மத்திய பா.ஜ.க. அரசின் இந்தச் செயல்பாட்டை அ.தி.மு.க. அரசு கண்மூடித்தனமாக ஆதரித்து அடிமைத்தனமாக நடந்து கொண்டுள்ளது.

எனவே தமிழக சட்டமன்றத்துக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் தேர்தலில் தொழிலாளர்களுக்கு துரோகம் இழைத்த அ.தி.மு.க., பாரதிய ஜனதா கூட்டணியை படுதோல்வி அடையச் செய்ய வேண்டும் என அனைத்துப் பகுதி தொழிலாளர்களையும் தொழிற்சங்கங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.

அ.தி.மு.க., பா.ஜ.க.வின் தொழிலாளர் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்தி சட்டமன்றத் தேர்தலில் அவர்களுக்கு எதிராக தொழிலாளர்கள் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்ச் 29, 30, 31 தேதிகளில் மூன்று நாட்கள் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி, பல்லடம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் அனைத்துத் தொழிற்சங்க நிர்வாகிகள் பிரச்சாரம் செய்வது என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் நான்கு தொகுதிகளிலும் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களிடம் துண்டுப் பிரசுரம் வழங்கி அ.தி.மு.க. ஆட்சியைத் தோற்கடிக்க வேண்டும் என வலியுறுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...