அதிமுக ஆட்சி அமைந்தவுடன் பொள்ளாச்சியில் மாவட்ட மருத்துவக் கல்லூரி கொண்டு வரப்படும் - துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உறுதி!

கோவை: அதிமுக ஆட்சி அமைந்தவுடன் பொள்ளாச்சியில் மாவட்ட மருத்துவக் கல்லூரி கொண்டு வரப்படும் என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உறுதி அளித்துள்ளார்.


கோவை: அதிமுக ஆட்சி அமைந்தவுடன் பொள்ளாச்சியில் மாவட்ட மருத்துவக் கல்லூரி கொண்டு வரப்படும் என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உறுதி அளித்துள்ளார்.

பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நகரப்பகுதியில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று நகராட்சிக்குட்பட்ட 29 மற்றும் 30வது வார்டுகளில் அன்னை கஸ்தூரி பாய் வீதி, கலைவாணர் வீதி, நேரு நகர் பகுதிகளில் வாக்கு சேகரிக்கச் சென்ற போது அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனர். அதிமுக தேர்தல் அறிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்போது, பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் 400க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் இதய அறுவை சிகிச்சை, கிட்னி மாற்று சிகிச்சை உள்ளிட்ட உயர்தர சிகிச்சை அளிக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதேபோல, மகப்பேறு சிகிச்சைக்காக மற்ற மாவட்டங்களுக்கும் முன்னோடியாக 200 தாய்மார்கள் தங்கும் வகையில் பிரசவ பகுதி கட்டும் பணி நடைபெறுகிறது. இதில் சிக்கலான பிரசவங்கள், பிரசவத்திற்கு பின்பு குழந்தைகளுக்கு ரத்த அழுத்தம், சுவாசப் பிரச்சனை ஏற்பட்டால் உயர் சிகிச்சை அளிக்கும் வகையில் முன்னோடி மருத்துவமனை தயாராகி வருகிறது.

மேலும், பொள்ளாச்சி மாவட்டமாக உருவான பிறகு மருத்துவக் கல்லூரி கொண்டு வரப்படும் என்று தெரிவித்த ஜெயராமன், கருத்து கணிப்பு பிரசாந்த் கிஷோரின் கருத்து திணிப்பு, இதை மக்கள் நம்ப மாட்டார்கள். 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும். கொரோனா காலத்தில் எடுத்த நோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக மக்கள் அமோக ஆதரவு அளித்து வருவதாக தெரிவித்தார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...