கோவை: கோவை மாவட்டத்தில் 800 பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மாவட்டத்தில் 800 பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தொகுதியில் பணியாற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இன்று நடைபெற்றது.
அப்போது, வாக்குச்சாவடி அலுவலர்கள் மின்னணு வாக்கு எந்திரத்தை கையாளும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்படும் இடத்தை இன்று கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் பார்வையிட்டார்.
மேலும், அஞ்சல் வாக்கு பதிவு செய்யும் இடத்தையும் ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவை மாவட்டத்தில் 800 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது என்றார்.
மேலும், தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் பதட்டமான வாக்குச்சாவடிகளை கணக்கெடுத்து வருவதாகவும், கோவை மாவட்டத்தில் கொரானா வைரஸ் தொற்று அதிகரித்தால் கொரோனா கேர் சென்டர் அமைக்கப்படும் என்றும், கோவை மாவட்டத்தில் தகுதியுடையவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.