கோவை: பொள்ளாச்சி மின்னல் மஹாலில் அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் அதிமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் மேற்கொண்டு பொள்ளாச்சி ஜெயராமனுக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சாந்தலிங்ககுமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் அதிமுக நகர செயலாளர் கிருஷ்ணகுமார் கலந்துகொண்டு தமிழக அரசின் 5 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு செய்த நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை வீடு வீடாகச் சென்று பொது மக்களிடம் எடுத்துரைத்து பாசறையைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து வெற்றி பெற உழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் மேற்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக், கிழக்கு ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட பாசறை இணைச் செயலாளர் சுரபிரமேஷ், நகர செயலாளர் சத்தியவர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.