கோவை: கோவை சிவானந்தா காலனி பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
கோவை: கோவை சிவானந்தா காலனி பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், இனிவரும் காலங்களிலும் தனித்து தான் நாம்தமிழர் கட்சி போட்டியிடும் என உறுதியாக தெரிவித்தார்.மேலும்,பாஜகவின் உண்மையான "பி" டீம் திமுக தான் எனவும், சிறுபான்மை மக்களின் பாதுகாவலர் என்று சொல்லி வரும் திமுக சிறுபான்மையினருக்கு தேர்தலில் குறைவான இடங்களே கொடுத்துள்ளது என்று குற்றம் சாட்டினர்.
"1998 ஆம் ஆண்டு தேர்தலில், பாஜக வுடன், அதிமுக முதலில் கூட்டணி வைத்தது, ஜெயலலிதா. பின்னர், 1999 தேர்தலில் தோள் கொடுத்து தூக்கியது திமுக எனவும், ஐந்து ஆண்டுகள் முழுமையாக பாஜக ஆட்சி செய்ய திமுக தான் காரணம்திருடன் கூட்டத்தில் மாட்டிக்கொள்ளாமல், இருக்க திருடன், திருடன் என கத்துவது போல "பி" டீம் என திமுக, பிறரை சொல்கிறது. திமுக போன்ற நாடகக்காரர்களை உலகத்தில் பார்க்க முடியாது", எனவும் அவர் தெரிவித்தார்.
"எத்தனை முறை நட்டா வந்தாலும், பாஜக நோட்டாவிற்கு கீழ் தான்வாங்கும்" எனவும், நாம் தமிழருக்கு வாக்களிப்பதால், பாஜக வந்துவிடும் என அஞ்சும் கோழைகள் வாக்களிக்க வேண்டாம். நாங்கள் இருக்கும் வரை பாஜக வராது, என நம்புபவர்கள் எனக்கு வாக்களியுங்கள் என்று தெரிவித்தார்.
பாஜகவுடன் அதிமுக நல்ல உறவு கொண்டுள்ளது எனவும் திமுக கள்ள உறவு கொண்டுள்ளது. தமிழன் உடம்பில் படர்தாமரை வளருமே தவிர, தமிழ் நிலத்தில் தாமரை மலராது, என்று அவர் சாடினார். தேர்தலுக்கு, பிறகு பாஜகவுடன் சேரமாட்டேன் என திமுக சொல்லுமா எனக் கேள்வி எழுப்பிய அவர், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக கட்சியையும், ஆட்சியையும் பாஜக பயன்படுத்திக் கொண்டது, எனத் தெரிவித்தார்.