கோவை: கோவை நிதிநிறுவனத்தில் கவரிங் நகைகளை அடகுவைத்து மோசடி செய்து தலைமறைவான மேலாளர், உதவி மேலாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பெண் ஊழியரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்துகின்றனர்.

கோவை குனியமுத்தூரில் செயல்பட்டு வரும் நிதி நிறுவனத்தில் அந்தப் பகுதி மக்கள் தங்கள் அவசர தேவைக்காக நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்று வருகிறார்கள். இந் நிறுவனத்தில் குனியமுத்தூரைச் சேர்ந்த நித்தியானந்தன் (வயது 36) என்பவர் மேலாளராக வேலைபார்க்கிறார். மயிலேறி பாளையத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (வயது 24) என்பவர் துணை மேலாளராகவும், குனியமுத்தூரைச் சேர்ந்த ரம்யா(24) என்பவர் ஊழியராகவும் உள்ளனர்.
இந்நிலையில் தணிக்கை அதிகாரிகள் அந்த நிதிநிறுவனத்தில் நகைகளை சோதனை செய்தபோது 5 லட்சத்து 20 ஆயிரத்து 125 ரூபாய்க்கு கவரிங் நகைகளை வைத்து மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இதுகுறித்து மேலாளர், துணை மேலாளர் மற்றும் பெண் ஊழியரிடம் கேட்டபோது அவர்கள் மூன்று பேரும் கவரிங் நகைகளை வைத்து மோசடி செய்ததை ஒப்புக்கொண்டனர். மேலும் அவர்கள் பணத்தை திருப்பித் தந்து விடுகிறோம் என்று கூறி அவகாசம் கேட்டனர்.
இந்நிலையில் மேலாளரும், உதவி மேலாளரும் தலைமறைவாகிவிட்டனர். இதுகுறித்து ஏரியா மேலாளருக்கு தெரிய வந்ததும் அவர் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சாந்தா உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் போலீசார் தனிப்படை அமைத்து தலைமறைவாக உள்ள நித்தியானந்தன் விக்னேஸ்வரன் ஆகியோரை தீவிரமாக தேடிவருகின்றனர். ஊழியர் ரம்யாவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.