போத்தனூர் பகுதியில் கிணத்துக்கடவு அ.தி.மு.க. வேட்பாளர் செ.தாமோதரன் தீவிர வாக்கு சேகரிப்பு!

கோவை: போத்தனூர் பகுதியில் கிணத்துக்கடவு அ.தி.மு.க. வேட்பாளர் செ.தாமோதரன் தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.


கோவை: போத்தனூர் பகுதியில் கிணத்துக்கடவு அ.தி.மு.க. வேட்பாளர் செ.தாமோதரன் தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

கிணத்துக்கடவு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் செ. தாமோதரன் கிணத்துக்கடவு தொகுதி பகுதிளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக இன்று போத்தனூர் பகுதியில் உள்ள கணேசபுரம், முத்துநகர் குறிச்சி கோண வாய்க்கால்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை அடங்கிய துண்டுப்பிரசுரங்களை வழங்கி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற மக்கள் நலத்திட்டங்களை தொடரவும், அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உள்ளபடி குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய், ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் இலவசம், விலையில்லா சோலார் அடுப்பு, வாஷிங் மெஷின் ஆகியவை பெற்றுத்தர தனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யவேண்டுமாறு வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...