கோவை: த.மா.கா.வில் இருந்து வெளியேறிய கோவை தங்கம் சேலத்தில் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். அதைத் தொடர்ந்து கோவை வடக்குத் தொகுதியில் வேட்பாளரை ஆதரித்து கோவை தங்கம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் தி.மு.க. வேட்பாளர் வடவள்ளி சண்முகசுந்தரம் கோவை வடக்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று சாய்பாபா காலனி கே.கே.புதூர் 12, 13, 14 ஆகிய வார்டில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

சண்முகசுந்தரத்தை ஆதரித்து வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
சாய்பாபா காலனி பகுதி வியாபாரிகள் மற்றும் படித்தவர்கள் நிறைந்த பகுதி. எனவே, தி.மு.க. வேட்பாளரை மகத்தான வெற்றி அடையச் செய்ய உங்கள் ஒத்துழைப்பு வேண்டும். வ.ம.சண்முகசுந்தரம் எளிமையான மனிதர். இந்த மண்ணின் மைந்தர் என்பது இப்பகுதி மக்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். ஆனால் எதிரணியில் நிற்பவர் யார் என்பதையும் இதற்கு முன்பு அவர் எந்த தொகுதியில் போட்டியிட்டார் என்பதும் தற்போது வடக்கு பகுதிக்கு வந்தது ஏன் என்பதும் மக்களுக்கு நன்கு தெரியும்.
தெற்கு தொகுதியில் அவர் எதுவுமே மக்களுக்கு செய்து தரவில்லை. அப்படி செய்திருந்தால் அங்கேயே நின்றிருப்பார். தற்போது அ.தி.மு.க. வேட்பாளர் வடக்கு பகுதிக்கு வந்துள்ளார் என்றால் இந்த தொகுதி மக்கள் ஏமாந்து விடாதீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் மேயர் ராமசாமி, காங்கிரஸ் கமிட்டி காயத்ரி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்பட சாய்பாபா காலனி பகுதி தி.மு.க. செயலாளர் கிருஷ்ணராஜ், 12-வது வார்டு அகஸ்டின், தனபால், லீலா கிருஷ்ணன், கந்தசாமி 14-வது வார்டு பொறுப்பாளர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.