கோவை: கோவையில் தேர்தல் தேதி நெருங்க நெருங்க பரபரப்புக்கு பஞ்சமில்லை. ஒரே நாளில் 3 கிலோ தங்க நகைகள் மற்றும் 30 லட்ச ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும்வகையில் தேர்தல் பறக்கும்படை மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த வேனில் அதை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது வேனில் ஒரு பார்சல் இருந்தது. அதனை பிரித்து பார்த்தபோது 3 கிலோ 150 கிராம் தங்க நகைகள் இருந்தன. அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் நகைகள் அதிகாரிகள் பறிமுதல் செய்து மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

கோவை சவுரிபாளையம் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஏ.டி.எம் எந்திரங்களுக்கு பணம் நிரப்ப ஒரு வேன் வந்தது. அதை நிறுத்தி சோதனை செய்தபோது உரிய ஆவணங்களின்றி ரூபாய் 30 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது. பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். கோவையில் அடுத்தடுத்து பணம் நகை பறிமுதல் மக்கள் மத்தியில் பரபரப்பு கூடியுள்ளது.