கோவை: கோவை கிணத்துக்கடவு செக்போஸ்ட் பகுதியில் குப்பை மேட்டில் இருந்து வெளியேறும் புகையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு செக்போஸ்ட் பகுதியில் ஏராளமான டீக்கடை, உணவக கடைகளும் உள்ளது. இந்த கடைகளிலிருந்து கொண்டுவரப்படும் குப்பை கழிவுகளை செக்போஸ்ட் பகுதியில் உள்ள மின் நிலையம் சாலையில் கொட்டப்பட்டு வருகிறது.

நாள் முழுவதும் கொட்டப்படும் இந்த குப்பைகளை அதிகாலை நேரத்தில் சிலர் தீ வைத்து விடுகின்றனர்.

இதனால் அந்தக் குப்பை மேட்டில் இருந்து வெளியேறும் புகை பொள்ளாச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இன்னலாக உள்ளது.

இந்த நிலையில், குப்பை மேட்டில் இருந்து வெளியேறும் புகையால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதோடு, மூச்சுத்திணறல் சுவாசக் கோளாறு ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
எனவே, கிணத்துக்கடவு பேரூராட்சி நிர்வாகம் செக்போஸ்ட் பகுதியில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.