கோவை: கோவையில் மருந்து விற்பனைப் பிரதிநிதி வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை திருடிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை கணபதி மாநகரைச் சேர்ந்தவர் புகழ் வேந்தன் (வயது 36). மருந்து வியாபாரியான இவர் நேற்று குடும்பத்துடன் மதுரையில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றார். அங்கிருந்து கோவையில் உள்ள அவரது வீட்டின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சிலர் புகழ் வேந்தனுக்கு போன் செய்தார்களாம். அப்போது அவர்கள் உங்கள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது, வந்து பாருங்கள் என்று கூறியிருக்கிறார்கள்.
இதையடுத்து கோவை திரும்பிய அவர் இன்று வந்து பார்த்தபோது கதவு திறக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 19 பவுன் நகை கொள்ளை போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த புகழ்வேந்தன் இதுகுறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை செய்தனர். மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.