கோவை: திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் கோவை தங்கம் தனது ஆதரவாளர்கள் த.ம.கவைச் சேர்ந்தவர்கள் 500-க்கும் மேற்பட்டோருடன் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

கோவையில் வசித்து வருபவர் தங்கம். இவர் காங்கிரஸிலிருந்து மூப்பனார் வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸ் உருவாக்கிய போது அவருடன் இணைந்து செயல்பட்டவர். தொடர்ந்து த.ம.காவிற்காக கோவை மாவட்டத்தில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர். கட்சியினுடைய உயர்ந்த பதவியான தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவராக பதவி வகித்தவர்.
இந்நிலையில், இந்த முறை அதிமுகவிற்கு தமகாவிற்கும் கூட்டணி ஏற்படுவதற்கு காலதாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், கோவை தங்கம் தொடர்ந்து போட்டியிட்டு வந்த வால்பாறை தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதை தொடர்ந்து மிகுந்த மன வருத்தத்துடன் இருந்த நிலையில் திடீரென தமக கட்சியில் இருந்து விலகுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து, வால்பாறை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்தார். பிறகு மு. க ஸ்டாலின் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வேட்பாளராக போட்டியிடுவதில் இருந்து வாபஸ் பெற்றார்.
இந்த நிலையில், அமைச்சர் எஸ். பி. வேலுமணியை எதிர்த்தும் அதிமுகவுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்யப் போவதாகவும், ஸ்டாலின் முதல்வராவது உறுதி என பேட்டி அளித்திருந்தார். இந்த நிலையில் நேற்று சேலத்தில் பிரசாரத்தை முடித்துவிட்டு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த திமுக தலைவர் மு. க ஸ்டாலினை கோவை தங்கம் நேரில் சந்தித்து தனது தொண்டர்களை 500 -க்கும் மேற்பட்டோர் உடன் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
பிறகு கோவை தங்கம் கூறும்போது:-
தொடர்ந்து 2021 தேர்தலில் கொங்கு மண்டல திமுக கோட்டையாக மாற்றி காட்டுவேன். தொடர்ந்து திமுகவினருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து 10 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்வேன் என்று கூறினார்.