வால்பாறை தேயிலைத் தோட்டத்தில் காட்டு யானைகள் முகாம்; தொழிலாளர்கள் அச்சம்

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலைத் தோட்டங்களில், காட்டு யானைகள் முகாமிடுவதும், இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலைக்கு செல்லமுடியாமல் தவிப்பது, அடிக்கடி நடந்து வரும் சம்பவம் தான்.


வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலைத் தோட்டங்களில், காட்டு யானைகள் முகாமிடுவதும், இதனால் தேயிலை

தோட்ட தொழிலாளர்கள் வேலைக்கு செல்லமுடியாமல் தவிப்பது, அடிக்கடி நடந்து வரும் சம்பவம் தான்.

சம்பீபத்தில், காட்டு யானைகள் தொழிலாளர்களின் குடியிருப்புகளில் புகுந்து வீடுகள், ரேஷன் கடைகள், சத்துணவுக் கூடங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களை

இடித்து சேதப்படுத்தி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. புகார்களின் பேரில், வனத்துறையினரும் தேயிலைதோட்ட காவலர்களும்இணைந்து காட்டு

யானைகளை விரட்டி வருகின்றனர்.



இந்நிலையில், இன்று 8 காட்டு யானைகள் தாய்முடி தேயிலைத் தோட்டத்திற்குள் புகுந்தன. தொடர்ந்து, காலையிலிருந்து அப்பகுதியில் உள்ள தேயிலைத்

தோட்டத்தில் முகாமிட்டு உள்ளதால் அப்பகுதி தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறிப்பது மருந்தடிக்கும் பணிகள் என அனைத்து பணிகளும் முடங்கியுள்ளன.

மேலும், இரவு காட்டு யானைகள் தொழிலாளர் குடியிருப்புக்குள் வரலாம் என்று அச்சத்தில் உள்ளனர். காட்டு யானைகள் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிக்குள்

வராமல் தடுத்திட வனத்துறையினரும் தேயிலை தோட்ட காவலர்களும் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு காட்டு யானைகளை தீவிரமாக கண்காணித்து

வருகின்றனர்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...