கோவையில் திமுகவினர் வீடு, மின்கம்பங்களில் போஸ்டர் ஓட்டி, தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டு வருவதாக அதிமுகவினர் புகார்.

கோவை: சிங்காநல்லூர் தொகுதியில் திமுக சார்பில், வீடு, மரங்கள், மின் கம்பங்கள் ஆகியவற்றில் போஸ்டர்களை ஒட்டி தேர்தல் விதிமுறையில் ஈடுபட்டுள்ளதாக, அதிமுக தலைமைக் கழக செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம் குற்றம் சாட்டியுள்ளார்.



கோவை: சிங்காநல்லூர் தொகுதியில் திமுக சார்பில், வீடு, மரங்கள், மின் கம்பங்கள் ஆகியவற்றில் போஸ்டர்களை ஒட்டி தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாக, அதிமுக தலைமைக் கழக செய்திதொடர்பாளர் கல்யாணசுந்தரம் குற்றம் சாட்டியுள்ளார்.



இது தொடர்பாக அவர் நம்மிடம் கூறியதாவது: கோவை லட்சுமிபுரம், சின்னசாமி நாயுடு லே அவுட்பகுதிகளில் வீடுகள், வாழை மரங்கள், மின் கம்பங்கள்

உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திமுக கட்சியினர் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இது அப்பட்டமான தேர்தல் விதிமுறை மீறலாகும். சம்பந்தப்பட்ட

உரிமையாளர்களின் அனுமதி இன்றி அவர்களது வீடுகள் முன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது. வாழை மரங்களைக் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை.இவை, எல்லாவற்றுக்கும் மேல் மின்கம்பங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளன.



இவை அனைத்தும் அக்கட்சி தொடர்ந்து செய்து வரும் அராஜக செயல்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இது குறித்து தேர்தல் அதிகாரியிடம் நான் புகார் அளித்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு நேரில் வந்து அதிகாரிகள் அவற்றை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...