கோவை: சிங்காநல்லூர் தொகுதியில் திமுக சார்பில், வீடு, மரங்கள், மின் கம்பங்கள் ஆகியவற்றில் போஸ்டர்களை ஒட்டி தேர்தல் விதிமுறையில் ஈடுபட்டுள்ளதாக, அதிமுக தலைமைக் கழக செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை: சிங்காநல்லூர் தொகுதியில் திமுக சார்பில், வீடு, மரங்கள், மின் கம்பங்கள் ஆகியவற்றில் போஸ்டர்களை ஒட்டி தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாக, அதிமுக தலைமைக் கழக செய்திதொடர்பாளர் கல்யாணசுந்தரம் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நம்மிடம் கூறியதாவது: கோவை லட்சுமிபுரம், சின்னசாமி நாயுடு லே அவுட்பகுதிகளில் வீடுகள், வாழை மரங்கள், மின் கம்பங்கள்
உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திமுக கட்சியினர் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இது அப்பட்டமான தேர்தல் விதிமுறை மீறலாகும். சம்பந்தப்பட்ட
உரிமையாளர்களின் அனுமதி இன்றி அவர்களது வீடுகள் முன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது. வாழை மரங்களைக் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை.இவை, எல்லாவற்றுக்கும் மேல் மின்கம்பங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் அக்கட்சி தொடர்ந்து செய்து வரும் அராஜக செயல்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இது குறித்து தேர்தல் அதிகாரியிடம் நான் புகார் அளித்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு நேரில் வந்து அதிகாரிகள் அவற்றை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.