வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் அ.ம.மு.க கூட்டணியில் தே.மு.தி.க கட்சி வேட்பாளராக முருகராஜ் போட்டியிடுகிறார். இன்று காலை முதல், அவர் வால்பாறை புது மார்க்கெட் என நகரின் மத்திய பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து, வாட்டர் பால், கவர்க்கல் தேயிலை தோட்டங்களில் முரசு சின்னத்திற்கு வாக்களிக்கும்படி மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். மேலும், துண்டு பிரசுரங்கள் மூலம் முரசு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என அவரது தொண்டர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த வாக்கு சேகரிப்பில் வேட்பாளர் முருகராஜுடன், அ.ம.மு.க மாவட்ட செயலாளர் சுகுமார், வால்பாறை நகர செயலாளர் நெல்லைச்செல்வன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.