கோவை: தொண்டாமுத்தூர் தொகுதியின் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு போஸ்டரை வெளியிட்டிருந்தார்.

அந்த போஸ்டரில், அதிமுக வேட்பாளர், அமைச்சர் எஸ் பி வேலுமணி பதுக்கி வைத்திருக்கும் பணம் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக [email protected] என்ற மின்னஜலுக்கு தகவல் தெரிவிக்கும்படி கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி, இதுவரை 458 மேல்
புகார்கள் ஆதாரங்களோடு, வந்துள்ளதாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்றின் போது அவர் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல், புகார் கொடுத்த நபர்கள் தங்களுடைய அடையாளங்களை வெளியே சொல்ல வேண்டாம் என்றும் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, அதை வெளியிடுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளது, வேலுமணியின் மேலிருக்கும் அச்சத்தை வெளிப்படுத்துகிறது என்று கார்த்திகேய சிவசேனாபதி குற்றம் சாட்டினார்.
மேலும், அவர் பேசியபோது 25 வருடகாலமாக திமுக நேரடியாக காங்கேயம் மற்றும் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடவில்லை, ஆனால் இம்முறை திமுகவின் பலம் என்னவென்று, கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்று சொல்பவர்களுக்கு காட்டுவோம், என கூறினார்.