கோவை: திமுக ஆட்சியின் போது தமிழக உரிமை பிரச்சனைக்கு தீர்வு காணாமல் மக்களுக்கு துரோகம் மட்டுமே செய்தனர் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை மாவட்டம் வால்பாறை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமியின் அறிமுக கூட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நா.மூ சுங்கம் பகுதியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, வால்பாறை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி அறிமுகம் செய்து பேசுகையில்,
கடந்த திமுக ஆட்சியின் போது காவிரி நீர், முல்லைப் பெரியாறு, மீனவர் பிரச்சனை, கச்சத்தீவு போன்ற தமிழக உரிமை பிரச்சனைகளை மீட்கக் கூடிய வாய்ப்பு இருந்தபோது, மத்திய அமைச்சர் பதவிக்காக எதுவும் செய்யாமல் தமிழக மக்களுக்கு துரோகம் மட்டுமே செய்தனர் என்றும், ராணுவ தளவாடங்களை அனுப்பி இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்தது, சிங்கள வெறியர்களால் 50ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் கற்பழிப்புக்கு துணை போனது திமுகவும்,காங்கிரஸ் தான் என்று குற்றம் சாட்டினார்.
அதேபோல, திமுக ஆட்சியின் போது தமிழகத்திற்கு துரோகம் செய்துவிட்டு தற்போது ஆட்சிக்கு வர நினைப்பது எந்த விதத்தில் நியாயம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
என் மீதும் சக அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு சொல்லும் திமுக தலைவர் ஸ்டாலின், திமுக கூட்டணியில் உள்ள வைகோ ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் பெறப்பட்ட பணம் திமுகவில் தான் இருப்பதாக பேசியதற்கு இதுவரை பதில் கூறாமல் இருப்பதாகவும், ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள் சொன்னால் சொல்லிக் கொண்டு போங்கள், ஆனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியை தமிழக முதலமைச்சராக அமர வைக்க நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்றும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசினார்.
இந்த அறிமுக கூட்டத்தில் பாஜக, பாமக, தாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.