கோவை: கோவை தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார்.

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் உக்கடம் பேருந்து நிலையம் அருகே உள்ள லட்சுமி நரசிம்மர் திருக்கோவிலில் வழிபட்டு தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார்.

இந்த பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், கூட்டணி கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

கோவை உக்கடம் பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் நேற்று சிறுபான்மையினருக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளை முன்வைத்து இஸ்லாமிய சமூகத்தினரிடம் வாக்கு சேகரித்தார்.

இந்நிலையில், இன்று அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து வீடுவீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பின்னர், மக்களின் குறைகளை கேட்டறிந்து, தான் வெற்றி பெற்றால் விரைவில் அவர்கள் குறைகளை தீர்ப்பதாகவும், கோவை தெற்கு தொகுதியின் மண்ணின் மைந்தன் என்பதால் இப்பகுதியின் பிரச்சினைகளை நன்கறிந்தவன் என்ற முறையில் தான் பல்வேறு நலத் திட்டங்கள் வைத்திருப்பதாக, வரும் சட்டமன்ற தேர்தலில் தனக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்ற பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.