கோவையில் கர்நாடக மதுபானங்கள் மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல்; இருவருக்கு வலைவீச்சு

கோவை: கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கர்நாடகா மதுபானங்களை விற்பனை மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள மற்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கர்நாடகா மதுபானங்களை விற்பனை மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள மற்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தொண்டாமுத்தூர் குளத்து பாளையத்தை சேர்ந்த திமுக கட்சியின் தொண்டாமுத்தூர் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பொன்ராஜ் என்பவர் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து அதில் பிரியதர்ஷன், அமரன் என்ற இரண்டு பேரை வேலைக்கு அமர்த்தி கர்நாடகா மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபான பாட்டில்களை வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து பிரியதர்ஷனை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்பொழுது, அவர் கொடுத்த தகவலின் பேரில் அதே பகுதியில் ஒரு குடோனில் ஒரு லட்சத்தி 9 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து, மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் மதுவிலக்கு பிரிவினர் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த சூழ்நிலையில், தப்பி ஓடிய பொன்ராஜ் மற்றும் அமரனை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் மாவட்ட எஸ்.பி அருளரசு, தடைசெய்யப்பட்ட மதுபானங்கள் மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யக்கூடியவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும், என எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...