கோவை: கேரளாவில் இருந்து கோவை நோக்கி முட்டை ஏற்றி வந்த லாரியில் 3.75 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை சூலூர் சிந்தாமணிபுதூர் டோல்கேட் கொச்சின் பைபாஸ் சாலையில் கேரளாவிலிருந்து பெருந்துறைக்கு முட்டை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது உரிய ஆவணங்களின்றி ரூபாய் 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்ததில், அந்த லாரி ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த கோழிப்பண்ணை அதிபர் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது.
லாரியை ஓட்டி வந்தவர் கார்த்திக் என்பதும், கேரளாவில் முட்டையை இறக்கிவிட்டு பணத்துடன் வந்தபோது பறக்கும் படையிடம் சிக்கிக்கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பணத்தை பறக்கும்படை அதிகாரி சக்திவேல் சூலூர் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தியிடம் ஒப்படைத்தார்.
இதுபோன்று இன்று காலை துடியலூரில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் பன்னிமடையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் உரிய ஆவணங்களின்றி 52 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை எடுத்து வந்தது தெரியவந்தது. அந்தப் பணத்தை பறிமுதல் செய்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோயில் அருகே அதிகாரிகள் சோதனை செய்தபோது ரவிச்சந்திரன் என்பவரிடமிருந்து 97 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.