பொள்ளாச்சியில் பல்வேறு திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 4 பேர் கைது - ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்!

கோவை: பொள்ளாச்சியில் பலவேறு திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.


கோவை: பொள்ளாச்சியில் பல்வேறு திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு குடியிருப்புகளில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணத்தை கொள்ளையடிப்பது மற்றும் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வந்தது.

இதனிடையே, இச்சம்பவங்களில் ஈடுபடும் கும்பலை பிடிக்க கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருளரசு உத்தரவின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், ஊஞ்சவேலாம்பட்டி பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனங்களில் வந்த நபர்களை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். மேலும் அவர்களை விசாரித்த போது வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது.



இதனையடுத்து, போலீசார் சென்னையைச் சேர்ந்த வெங்கடேசன், கோபிநாத், வினோத்குமார், சிவகுரு உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...