சோலையாரில் சிறுத்தையால் தாக்கப்பட்ட சிறுவன்: மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றம்!

கோவை: சோலையாரில் சிறுத்தையால் தாக்கப்பட்ட சிறுவன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காகக் கோவைக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


கோவை: சோலையாரில் சிறுத்தையால் தாக்கப்பட்ட சிறுவன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காகக் கோவைக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

வால்பாறையை அடுத்துள்ள சோலையார் எஸ்டேட், மூன்றாவது டிவிஷன் பகுதியில் நேற்று மாலை வீட்டுக்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்த ஈஸ்வரன்(12) என்ற சிறுவனை சிறுத்தை தாக்கியது.

அப்போது, பொதுமக்கள் சிறுத்தையிடம் சிக்கிய சிறுவனை மீட்டு பின்னர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற வனத்துறையினர் வால்பாறையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் நேற்று இரவு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்து வந்தனர்.

அங்கு கழுத்து பகுதியில் பலத்த காயம்பட்ட சிறுவனுக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...