கோவை மாவட்டத்தில் தபால் வாக்கு அளிக்க 8,642 பேர் விருப்பம் அதிகாரிகள் தகவல்
கோவை, மார்ச் 19: கோவை மாவட்டத்தில்80 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்களில் தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்து 8 ஆயிரத்து 642 பேர் விண்ணப்பித்துள்ளனர், என மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் 64 ஆயிரத்து 650 பேர், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு தபால் வாக்கு அளிப்பதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த வாக்குச் சாவடி அலுவலர்கள் மூலம் வாக்காளர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்து 8 ஆயிரத்து 642 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். இவர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி வாக்குச் சீட்டு வழங்கப்படும் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘‘ கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளிலும் தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்து 8 ஆயிரத்து 642 பேர் ண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பின் வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் நடைமுறைப்படி தபால் வாக்கு அளிப்பதற்கான வாக்குச் சீட்டு வழங்கப்படும்,’’ என்றார்.