கோவை மாநகராட்சி பகுதியில் கூடுதலாக ஒரு கொரோனா சிகிச்சை மையம் திறக்க திட்டம் - கலெக்டர் தகவல்

கோவை மாநகராட்சி பகுதியில் கூடுதலாக ஒரு கொரோனா சிகிச்சை மையம் திறக்க திட்டம் - கலெக்டர் தகவல்


கோவை: கோவையில் கொரோனா தொற்று குறைந்து வந்த சூழ்நிலையில் கடந்த 15 நாட்களாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று, முன்தினம் ஒரே நாளில் 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.தற்போது, தமிழக அளவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் கோவை 2-ம் இடத்தில் உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கோவை அரசு மற்றும் இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் கூடுதலாக மாநகராட்சி உதவியுடன் ஒரு கொரோனா சிகிச்சை மையம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ராஜமணி கூறியதாவது:-

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 665 படுக்கை வசதிகள் உள்ளன. இதில் 100 அவசர சிகிச்சை வசதி கொண்ட படுக்கைகளாகும். இங்கு, தற்போது 117 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதியுள்ள படுக்கைகள் காலியாக உள்ளன. இதுதவிர கோவை அரசு மருத்துவமனையில் 555 படுக்கைகள் உள்ளன. இங்கு 25 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் மீதி படுக்கைகள் காலியாக உள்ளன.

இதுதவிர, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில்160 படுக்கைகளும், மதுக்கரை அரசு மருத்துவமனையில் 40 படுக்கைகளும் கொரோனா சிகிச்சைக்காக தயார் நிலையில் உள்ளது. மேலும், ஊரக பகுதியான மத்தாம்பாளையத்தில் உள்ள கருண்யா கொரோனா சிகிச்சை மையத்தில் 607 படுக்கை வசதிகள் உள்ளன. இங்கு 58 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மீதி படுக்கைகள் காலியாக உள்ளன. மேட்டுப்பாளையத்தில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் தயாராக உள்ளது.

கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று பரவல் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இனி வரும் நாட்களில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் மாநகராட்சியின் உதவியுடன் கூடுதலாக ஒரு கொரோனா சிகிச்சை மையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு கோவை ஆட்சியர் ராஜாமணி கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...