கோவை: தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களும், வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் பணியை முடித்த கையோடு, பிரச்சார வேளைகளில் மும்மரம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா ஆர் கிருஷ்ணன் கடந்த திங்கள் அன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதன்பின்பு, தொகுதி மக்கள், சிறு, குறு தொழில் முனைவோர், என பல்வேறு தரப்பினர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.
இந்நிலையில், இன்று அவர், கோவை சி எஸ் ஐ திருமண்டல பேராயர் தீமோத்தி ரவீந்திரனை சந்தித்து, கிறிஸ்துவ மக்களின் முழு ஆதரவை மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி அளிக்கும்படி ஆதரவு கோரினார்.
இந்த சந்திப்பின் போது, ஆயர்பிரின்ஸ் கால்வின், திருமண்டல செயலாளர் டேவிட் பர்னபாஸ், ஆயர் ராஜா, மாவட்ட சிறுபான்மை அமைப்பாளர் மைக்கேல், பாட்ஷா, காந்திபுரம் சிஎஸ்ஐ கிருஸ்து நாதர் ஆலய நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், தேவராஜ் சாமுவேல், உட்பட்ட பலர் உடனிருந்தனர்.