திருப்பூர்: திருப்பூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக முன்னாள் மேயர் விசாலாட்சியும், அதிமுக சார்பில் முன்னாள் துணை மேயரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான குணசேகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில், இன்று ஒரே நேரத்தில் இருவரும் மாநகராட்சி அலுவலகத்தில் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்ய வந்தனர்.

முதலாவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் விசாலாட்சி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பின்னர், அதிமுக வேட்பாளர் குணசேகரன் வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.
குறிப்பாக, வேட்பு மனு தாக்கலின் போது ஒருவருக்கொருவர் பரஸ்பரம் வணக்கம் செலுத்திக் கொண்டனர். இருவரும் அதிமுகவில் இருந்த போது விசாலாட்சி மேயராகவும் குணசேகரன் துணை மேயராகவும் பதவி வகித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.