வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தொடர்ச்சியாக, வீட்டில் வளர்க்கும் நாய், கோழி, ஆடு போன்றவைகளை சிறுத்தை வேட்டையாடித் கொன்று வந்தது, மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தொடர்ச்சியாக, வீட்டில் வளர்க்கும் நாய், கோழி, ஆடு போன்றவைகளை சிறுத்தை வேட்டையாடித் கொன்று வந்தது,
மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், வால்பாறை அருகே சோலையார் எஸ்டேட் முதல் பிரிவு பகுதியில் குடியிருந்து வரும் ஈஸ்வரன் என்பவர் மகன் ஆகாஷ் வயது 12, இன்று மாலை 4 மணி அளவில் வீட்டிற்கு வெளியே மூன்று சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று ஆகாஷ் என்ற சிறுவனை தாக்கி கடித்து தேயிலைத் தோட்டத்திற்குள் இழுத்துச் சென்றது.
இதைப் பார்த்த மற்ற சிறுவர்கள் சிறுவனின் காலைப் பிடித்து இழுத்து சத்தம் போட்டு காப்பாற்ற முயற்சி செய்தனர். அதே சமயம், அப்பகுதியில் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் வழியில் சந்திரன் மற்றும் ராஜன் என்ற இரு தொழிலாளர்கள் சிறுவர்கள் அலறும் சத்தத்தை கேட்டு அங்கு விரைந்தனர்.

உடனடியாக, சிறுவனை காப்பாற்றி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, சிறுவனுக்கு முதல் உதவி சிகிச்சை கொடுத்த பின்னர், மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

சிறுவனை சிறுத்தை தாக்கிய சம்பவம் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மனிதர்களை தாக்க ஆரம்பித்துள்ள அந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.