கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை சிங்காநல்லூர் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு, 'கொரோனா' பாதிக்கப்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கோவை மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதிக்கு போட்டியிடுவோரிடம் இருந்து, மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில், வேட்பு மனுக்கள் பெறப்படுகின்றன. ஒவ்வொரு தொகுதிக்கும் இரு உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சிங்காநல்லூருக்கு நியமிக்கப்பட்ட, உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான, தெற்கு தாலுகா தாசில்தார் சரவணனுக்கு, 'கொரோனா' பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து, தெற்கு தாலுகா அலுவலகத்திலும், மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்திலும் கிருமி நாசினி தெளித்து, சுத்தம் செய்யப்பட்டது. தாலுகா அலுவலக ஊழியர்கள் அனைவரிடமும் கொரோனா பரிசோதனைக்காக, சளி மற்றும் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.
மேலும், மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில், அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அடுத்த கட்டமாக, மாதிரி சேகரிக்க, சுகாதாரப்பிரிவினர் முடிவு செய்துள்ளனர்.