கோவை தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல்!

கோவை: கோவை தொண்டாமுத்தூர் தொகுதியின் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில் அரசனை சந்தித்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.



கோவை: கோவை தொண்டாமுத்தூர் தொகுதியின் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில் அரசனை சந்தித்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.



முன்னதாக திமுக தொண்டர்கள், கூட்டணி கட்சி ஆதரவாளர்கள் என பெரும் படையோடு தனது தேர்தல் பிரச்சார வாகனத்தில், திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி தொண்டாமுத்தூர் தொகுதி மக்களிடம் ஆதரவு கேட்டுக்கொண்டே பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்த கார்த்திகேய சிவசேனாபதி, தொண்டாமுத்தூர் தொகுதி மக்களுக்கு ஊழல் அற்ற ஆட்சியை கொடுப்போம் என்றார்.

குண்டர்களை இறக்கி திமுகவினர் அராஜகம் செய்வதாக எஸ். பி. வேலுமணி முன்வைத்த குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்த கார்த்திகேய சிவசேனாபதி, குண்டர்கள் இறக்கி அராஜகம் செய்கிற அளவிற்கு எங்களிடம் பண பலம் இல்லை. அவை அனைத்தும் செய்வது எஸ். பி. வேலுமணி தான் என்று கூறினார்.

மேலும், மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு வரும் ஜூன் மாதம் விசாரணைக்கு வரும் பட்சத்தில் எஸ்.பி.வேலுமணியின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வரும் என்று கார்த்திகேய சிவசேனாபதி தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...