கோவை: கோவை வடக்கு தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் வ.ம.சண்முகசுந்தரம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கோவை: கோவை வடக்கு தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் வ.ம.சண்முகசுந்தரம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கோவை வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் வ.ம.சண்முகசுந்தரம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் பேரணியாக வந்து, கோவை லாலி ரோடு சந்திப்பில் உள்ள வேளாண்மை விரிவாக மையத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் அவரது வேட்பு மனுவை முறையாக தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம், கோவை வடக்கு தொகுதியில் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது எனவும் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் தொகுதி மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்ததாக கூறினார்.
மேலும், தான் வெற்றி பெற்ற பிறகு அடிப்படை வசதிகளான குடிநீர், சாக்கடை நீர், தெருவிளக்கு உள்ளிட்ட பிரச்சனைகள் தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதேபோல, அருந்ததியர் அடித்தட்டு மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.