பொய்பிரச்சாரம் செய்வதுதான் திமுகவின் வேலை; அமைச்சர் வேலுமணி கடும் தாக்கு

பொள்ளாச்சி; சமூக வலைதளங்களின் வாயிலாக பொய் பிரச்சாரம் செய்து அவதூறு பரப்புவதுதான் திமுகவின் வேலையாக இருக்கிறது என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்குதல் தொடுத்துள்ளார்.


பொள்ளாச்சி; சமூக வலைதளங்களின் வாயிலாக பொய் பிரச்சாரம் செய்து அவதூறு பரப்புவதுதான் திமுகவின் வேலையாக இருக்கிறது என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்குதல் தொடுத்துள்ளார்.



பொள்ளாச்சி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த நிலையில் பொள்ளாச்சி - கோவை சாலையில் உள்ள ஆச்சிபட்டி மைதானத்தில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.



இதில் உள்ளாட்சி துறை அமைச்சர் SP வேலுமணி, பி.ஜே.பி., பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். பொள்ளாச்சி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ஜெயராமன் வெற்றி பெற தொண்டர்கள் பாடுபட வேண்டும் என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வேட்பாளர் அறிமுகத்துக்குப் பின்னர் கூட்டத்தில் பேசிய அமைச்சர் எஸ் பி வேலுமணி, “திமுக தொடர்ந்து பொய் பிரச்சாரங்களை செய்து முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருகிறது. பொது மக்கள் யாரும் இதை நம்ப மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...