கோவை: பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கலை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மத்திய தபால் தந்தி அலுவலகம் முன்பாக பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்தும், எல்.ஐ.சி பங்குகளை தனியாருக்கு விற்கிற மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்த அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயப்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து வங்கி ஊழியர்களால் மார்ச் 15, 16 ஆம் தேதிகளில் நடைபெற்று கொண்டிருக்கும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மேலும், அந்நிய முதலீட்டை 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்தியுள்ளதை எதிர்த்து, காப்பீட்டு துறை ஊழியர்கள் சார்பில் மார்ச் 18ம் தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய போராட்டத்தை ஆதரித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக தெரிவித்தனர்.