கிணத்துக்கடவு; தேசிய குடற்புழு நீக்க வாரத்தை ஒட்டி கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் 1 முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு குடற்புழு பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதனை போக்குவதற்கு மாத்திரைகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தேசிய குடற்புழு நீக்கம் வாரம் இரண்டு கட்டமாக இன்று முதல் 29ம் தேதி வரை கடைபிடிக்கபடுகிறது.

இதையடுத்து கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சமித்தா தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு குடற்புழு பாதிப்பை தடுப்பதற்கான அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்பட்டன. குடற்புழு நீக்கத்தினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் மாணவ- மாணவர்களிடையே சுகாதார துறையினர் எடுத்துரைத்தனர்.

குடற்புழு நீக்கத்தினால் ரத்தசோகை தடுக்கப்படுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் வாயிலாக, அறிவுத்திறனும் மற்றும் உடல் வளர்ச்சியும் மேம்படும் என மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முதல் கட்டமாக இன்றுமுதல் 20ம் தேதி வரையும், இரண்டாவது கட்டமாக 22ம் தேதி முதல் 27ம் தேதி வரையும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இதில் விடுபட்ட குழந்தைகளுக்கு மார்ச் 29ம் தேதி சிறப்பு முகாம் வாயிலாக குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.