நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி", டிவிட்டரில் வானதி நக்கல் பதில்..!
கோவை: அரசியல்வாதியிடம் பெட்ரோல், டீசல் பற்றி கேட்டு கேட்டு போர் அடித்து போச்சு உங்களுக்கு விலைவாசி பிரச்சினை என்றால், எங்களுக்கு எங்க தல பட ரிலீஸ் தாமதம் தான்யா பிரச்சினை என்று, ஒரு அஜித் ரசிகர் நினைத்தாரோ என்னமோ, இன்று அவர் வானதி சீனிவாசனை டேக் செய்து நக்கலாக டிவிட்டரில் படம் குறித்து கேட்டுள்ளார்.
அதற்கு டென்ஷன் ஆகாமல், கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் மற்றும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர், வானதி சீனிவாசன் அந்த நபரிடம் "நான் வெற்றிபெற்றவுடன் வலிமை பட அப்டெட் தருகிறேன் தம்பி" என்று நக்கலாக பதில் அளித்துள்ள டுவீட், வைரலாகி வருகிறது.
தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சமூக வலயதளங்களில் கேலி, கிண்டல்கலுக்கு பஞ்சமே இல்லை.. அதிலும், கோவை குசும்பு தனித்து நிற்கும். ஆரம்பத்தில் மீம்ஸ் போன்ற கிண்டல்களை சீரியஸாக பார்த்து வந்த அரசியல்வாதிகள் இன்று இளைஞர்களின் குசும்புகளை "கூல்" லாக டீல் செய்யும் நிலைக்கு வந்துள்ளனர்.
இன்னமும் சொல்லபோனால், இன்று பாஜகவின் வானதி சீனிவாசன் பதில் அளித்தது, மக்களுடன் என்றும் இணைதிருப்பேன் என்று சொல்லாமல் சொல்வது போல் உள்ளது, என்ற கோணத்திலும் பார்க்கலாம்.
அட, என்னமோ போங்க, யாராவது ஆட்சிக்கு வந்து எனக்கு வலிமை பட அப்டேட் தந்தா சேரி, என அந்த தம்பியின் மைண்ட் வாய்ஸ் இருக்க, மற்றொரு புறம், சில நெட்டிசன்கள் பாஜகவை கலாய்க்கும் விதமாக நீங்கள் வெற்றியடைய போவதில்லை வலிமை அப்டெட்டும் வர போவது இல்லை என்று நக்கல் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.