"நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி", டிவிட்டரில் வானதி நக்கல் பதில்..!

நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி", டிவிட்டரில் வானதி நக்கல் பதில்..!








கோவை: அரசியல்வாதியிடம் பெட்ரோல், டீசல் பற்றி கேட்டு கேட்டு போர் அடித்து போச்சு உங்களுக்கு விலைவாசி பிரச்சினை என்றால், எங்களுக்கு எங்க தல பட ரிலீஸ் தாமதம் தான்யா பிரச்சினை என்று, ஒரு அஜித் ரசிகர் நினைத்தாரோ என்னமோ, இன்று அவர் வானதி சீனிவாசனை டேக் செய்து நக்கலாக டிவிட்டரில் படம் குறித்து கேட்டுள்ளார். 



அதற்கு டென்ஷன் ஆகாமல், கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் மற்றும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர், வானதி சீனிவாசன் அந்த நபரிடம் "நான் வெற்றிபெற்றவுடன் வலிமை பட அப்டெட் தருகிறேன் தம்பி" என்று நக்கலாக பதில் அளித்துள்ள டுவீட், வைரலாகி வருகிறது. 



தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சமூக வலயதளங்களில் கேலி, கிண்டல்கலுக்கு பஞ்சமே இல்லை.. அதிலும், கோவை குசும்பு தனித்து நிற்கும். ஆரம்பத்தில் மீம்ஸ் போன்ற கிண்டல்களை சீரியஸாக பார்த்து வந்த அரசியல்வாதிகள் இன்று இளைஞர்களின் குசும்புகளை "கூல்" லாக டீல் செய்யும் நிலைக்கு வந்துள்ளனர். 

இன்னமும் சொல்லபோனால், இன்று பாஜகவின் வானதி சீனிவாசன் பதில் அளித்தது, மக்களுடன் என்றும் இணைதிருப்பேன் என்று சொல்லாமல் சொல்வது போல் உள்ளது, என்ற கோணத்திலும் பார்க்கலாம். 

அட, என்னமோ போங்க, யாராவது ஆட்சிக்கு வந்து எனக்கு வலிமை பட அப்டேட் தந்தா சேரி, என அந்த தம்பியின் மைண்ட் வாய்ஸ் இருக்க, மற்றொரு புறம், சில நெட்டிசன்கள் பாஜகவை கலாய்க்கும் விதமாக நீங்கள் வெற்றியடைய போவதில்லை வலிமை அப்டெட்டும் வர போவது இல்லை என்று நக்கல் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...