அதிமுக-பாஜக கூட்டணியை தோற்கடிப்போம்; மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு தீர்மானம்

கோவை: அதிமுக, பாஜக அணியை தோற்கடித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றியை உறுதி செய்வோம் என மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.


கோவை: அதிமுக, பாஜக அணியை தோற்கடித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றியை உறுதி செய்வோம் என மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

கோவை மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு ஆலோசனை கூட்டம் சனியன்று திருச்சி சாலையில் உள்ள ஐஎன்டியுசி அலுவலகத்தில் நடைபெற்றது பி.சண்முகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.



இக்கூட்டத்தில், நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து மக்களின் மீது கொடூரமான தாக்குதல் நடக்கிறது. ஆகவே அதிமுக- பாஜக கூட்டணியை தமிழக உழைப்பாளி மக்கள் நிராகரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...