நீலகிரி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிமுகம்

நீலகிரி; குன்னூர் மற்றும் கூடலூர் சட்டபேரவைத் தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் குன்னூரில் சனிக்கிழமை நடைபெற்றது.


நீலகிரி; நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் மற்றும் கூடலூர் சட்டபேரவைத் தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் குன்னூரில் சனிக்கிழமை நடைபெற்றது.



குன்னூர் சட்டபேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக இளித்துரை கா.ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். கூடலூர் சட்ட பேரவை தொகுதி திமுக வேட்பாளராக எஸ்.காசிலிங்கம் களம் இறக்கப்பட்டுள்ளார். இதையடுத்து திமுக சார்பில் குன்னூர் அண்ணா சிலை அருகே வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட குன்னூர் திமுக வேட்பாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான இளித்துரை கா.ராமசந்திரன் பேசும் போது, “நான் எம்எல்ஏவாக வெற்றி பெற்றால் மார்கெட் கடைகள் வாடகைப் பிரச்சினை தீர்வு காணுதல், கட்டட வரை முறை சட்டத்தை எளிதாக்குதல் ஆகியவற்றுக்கு நடவடிக்கை எடுப்பேன்” என்றார். இந்த நிகழ்சியில் நீலகிரி திமுக மாவட்டச் செயலாளர் பா.மு.முபாரக், நகர செயலாளர் எம். ராமசாமி,சிறுபான்மை பிரிவு மாநில துணை செயலாளர் இரா.



அன்வர்கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...